சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
சிஎஸ்கேவின் 40% சிக்ஸர்களை அடித்தது தோனி..! தோல்விக்குக் காரணம் கூறிய முன்னாள் வீரர்!
ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது
ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் 8 சிக்ஸர்கள் அடித்தது. அதில் தோனி மட்டுமே 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதாவது, 37.5 சதவிகிதம் தோனியால் அடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 2 ஓவர்களில் தோனி 3 சிக்ஸர்கள் அடித்தார். மீதமுள்ள 18 ஓவர்களில் 5 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன.
18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியுற்றது. அதாவது, 3 சிக்ஸர்கள். இதுதான் சிஎஸ்கே அணி தோல்விக்கு காரணமாக பேசப்பட்டு வருகின்றன.
இது குறித்து முன்னாள் நியூசி. வீரர் சைமன் டௌல் கூறியதாவது:
தோனியை குறைகூற முடியாது
12 பந்துகளில் தோனி 3 சிக்ஸர்கள் அடிக்கிறார். அவரைத் தவிர்த்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணி வீரர்களும் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள்.
தோனியை இன்னும் முன்னதாக களமிறக்க வேண்டுமென அதனால்தான் சொல்கிறோம். 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்த தோனியை நாம் குறைகூற முடியாது.
ஜடேஜா முன்னதாக வந்திருக்க வேண்டும்
கான்வே ஸ்டிரைக் ரேட் 140இல் விளையாடுகிறார். ஆனால், வெற்றிபெற அணிக்கு அவர் 190 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருக்க வேண்டும். அவருக்குப் பதிலாக ஜடேஜாவை அனுப்பியது சரிதான். ஆனால், அவர் இன்னமும் முன்னதாக வந்திருக்க வேண்டும் என்றார்.