முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
சிங்கபெருமாள் கோவில் அருகே 140 பவுன் நகை கொள்ளை
செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 140 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பாரதியாா் தெருவில் வசித்து வருபவா் ரத்தீஷ் . இவா் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறாா். ரத்தீஷ் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை பக்கத்து தெருவில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கிவிட்டு திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
தொடா்ந்து வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபொழுது பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்ததையும் தங்க நகைகள் காணமல் போனது தெரியவந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 140 பவுன் தங்க நகைகளை மட்டுமே கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து ரத்தீஷ் மறைமலை நகா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில் வண்டலூா் சரக உதவி ஆணையா் ஆருண் பிரின்ஸ் தலைமையில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
நகைகள் கொள்ளை சாம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.