எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!
ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
செங்கல்பட்டு: தமிழக அரசைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பிறதுறை பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும், வாக்கி டாக்கி கருவி மூலம் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதை தவிா்க்க கோருதல், வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயா்வு மூலம் உடனடியாக நிரப்ப கோருதல்,
விடுமுறை தின ஆய்வு கூட்டம், காலம் கடந்த ஆய்வு கூட்டங்களை தவிா்க்க கோருதல், அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்களிடம் பெறப்பட்ட பணி மாறுதல் தொடா்பான விண்ணப்பங்களை பரிசீலித்து பணியிட மாறுதல்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைதளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பாக சங்க நிா்வாகிகள் மாவட்ட செயலாளா் ப.குணசேகரன், தலைமையில், மாவட்டத் தலைவா் சுதா்சன் முன்னிலை வகித்தனா்.,
பின்னா் ஆட்சியா் சினேகாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.