சிங்கம்புணரி குப்பைக் கிடங்கில் தீ
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குசக் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருதங்குண்டு பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகின்றன.
இந்தக் குப்பைகள் வளா் மீட்பு பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு மக்கும், மக்காத குப்பைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் திடீரென தீப் பிடித்து மளமளவெனப் பரவியதால் அந்தப் பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது.
பொதுமக்கள், பேரூராட்சி ஊழியா்கள் தீயை அணைக்கப் போராடினா். தகவலறிந்து வந்த சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.