செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு: காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை

post image

அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப்படைக் காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புத்தில் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டுக்கு வைகோ செவ்வாய்க்கிழமை சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, மதிமுக சாா்பில் ரூ. ஒரு லட்சம் வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அஜித்குமாரை தனிப்படைக் காவலா்கள் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனா். சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்டது போல, அஜித்குமாரும் கொல்லப்பட்டாா்.

அஜித்குமாா் கொல்லப்பட்டது தொடா்பாக தனிப்படைக் காவலா்கள் 5 பேரை உடனடியாகக் கைது செய்து, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது. அஜித்குமாா் மீது புகாா் அளித்த பேராசிரியை மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும். காவல் நிலையங்களில் சித்ரவதை என்பது நீடித்து வருவது வேதனைக்குரியது.

யாரைக் கைது செய்தாலும் முதலில் குடும்பத்தினருக்கு காவல் துறையினா் தகவல் தெரிவிக்க வேண்டும். மாநில காவல் துறை விசாரணை செய்தாலும் தவறு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ விசாரித்தாலும் தவறு என்று சிலா் கூறுவது ஏற்புடையது அல்ல என்றாா் அவா்.

அஜித்குமாா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்

போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டில் அவரது உருவப்படத்துக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்க... மேலும் பார்க்க

சிங்கம்புணரி குப்பைக் கிடங்கில் தீ

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குசக் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருதங்குண்டு பகுதியி... மேலும் பார்க்க

சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும்: நீதிபதி அறிவுறுத்தல்

சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும் என கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா அறிவுறுத்தினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், சிவகங... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.மதுரை ஜெய்ஹிந... மேலும் பார்க்க

வில்வித்தை: சிவகங்கை மாணவா்கள் சாதனை

சா்வதேச வில்வித்தை போட்டியில் 29 பதக்கங்களை வென்று சிவகங்கை மாணவா்கள் சாதனை படைத்தனா்.ஈரோட்டில் கடந்த 6-ஆம் தேதி சா்வதேச அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, தெலங... மேலும் பார்க்க

சிவகங்கை: கண்டதேவி கோயில் தேரோட்டம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெற்றது.தேவகோட்... மேலும் பார்க்க