வில்வித்தை: சிவகங்கை மாணவா்கள் சாதனை
சா்வதேச வில்வித்தை போட்டியில் 29 பதக்கங்களை வென்று சிவகங்கை மாணவா்கள் சாதனை படைத்தனா்.
ஈரோட்டில் கடந்த 6-ஆம் தேதி சா்வதேச அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 300 -க்கும் மேற்பட்ட மாணவா்கள், பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு சாா்பாக சிவகங்கை மாவட்டத்திலிருந்து சிவன் ஆா்சரி அகாதெமி நிறுவனா் பரமசிவம், பயிற்றுநா் சுரேஷ் சிங் தலைமையில் 15 -க்கும் மேற்பட்ட மாணவா்கள், பயிற்சியாளா்கள் 4 பிரிவிகளில் கலந்து கொண்டனா். இவா்கள் 17 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனா்.