சிதம்பரம் கோதண்டராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
சிதம்பரம் மேல வீதி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
இந்தக் கோயிலில் சனிக்கிழமை (மாா்ச் 29) பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவுள்ளது. மேல வீதியில் உள்ள கோயில் வளாகத்திலிருந்து மேளதாளம் முழங்க தோ் புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோயிலை அடைகிறது. அன்றைய தினம் காலை திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மாலை சீதா கல்யாணமும் நடைபெறவுள்ளன.
ஏப்ரல் 7-ஆம் தேதி புஷ்பயாகமும், மாலை ஸ்ரீஆஞ்சநேயா் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஏப்ரல் 8-ஆம் தேதி சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 9-ஆம் தேதி விடயாத்தி திருமஞ்சனமும் நடைபெறவுள்ளன. மேலும், தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமா் வீதியுலா வருகிறாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.