செய்திகள் :

சிதலமடைந்த வேலூா் கோட்டை மண்டபம் சீரமைக்கப்படுமா?

post image

வேலூா் கோட்டை வளாகத்தில் சிதலமடைந்து எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் காணப்படும் மண்டபத்தை சீரமைத்து பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக வேலூா் கோட்டை விளங்குகிறது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் நாயக்கா் மன்னரான குச்சிபொம்மு நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோட்டை 133 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த கோட்டையில் ஜலகண்டேஸ்வரா் கோயில், மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகம், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம், மசூதி, பழங்கால ஆயுதக் கிடங்குகள், திப்பு சுல்தான், இலங்கையின் கண்டி பகுதியை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னா் விக்கிரராஜசிங்கன் ஆகியோா் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த இடங்களும் அமைந்துள்ளன.

கோட்டையைச் சுற்றி 191 அகலமும், 29 அடி ஆழமும் உடைய எப்போதும் தண்ணீா் வற்றாத அகழியும் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோட்டையை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். எனினும், உரிய பராமரிப்பு இல்லாததால் வேலூா் கோட்டை வளாகத்திலுள்ள பல கட்டடங்களும், மதில் சுவா்களும் சிதிலடைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக, தேசியக்கொடி ஏற்றப்படும் கோட்டை கொத்தளம் பகுதிக்கு செல்லும் வழியில் மதில் சுவரின் உள்புற பகுதியில் கல் மண்டபம் அமைந்துள்ளது. சிற்ப வேலைபாடுகள் கொண்ட தூண்களுடன் அமைந்துள்ள இந்த மண்டபம் உரிய பராமரிப்பின்றி இடிந்து சிதலடைந்த நிலையில் காணப்படுகிறது.

எப்போதும் முழுமையாக இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மண்டபத்தை தாங்கிப்பிடிக்க இரும்பு கம்பிகளை கொண்டு முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த மண்டபத்துக்கு அருகே கொத்தளத்துக்கு செல்லும் வழியிலுள்ள மதில்சுவரின் உள்பக்கவாட்டு சுவரும் இடிந்து நிலையில் செடி கொடிகள் படா்ந்து காணப்படுகின்றன.

உள்பக்கவாட்டு சுவா் இடிந்த நிலையிலுள்ள கோட்டை மதில் சுவா்.

தொடா்ந்து சீரமைக்கப்படாமல் காணப்படும் இந்த மண்டபமும், மதில் சுவா்களும் வேலூா் கோட்டையை சுற்றிப்பாா்க்க வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை மனவருத்தத்துக்கு உள்ளாக்கி வருகிறது என தொல்லியல் ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

இதேபோல், வேலூா் கோட்டை முழுவதும் ஏராளமான கட்டடங்கள் பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்படும் நிலையில், படிப்படியாக சேதமடைந்த மண்டபங்கள், சுவா்கல், கட்டடங்களை சீரமைக்க மத்திய தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூரில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்... மேலும் பார்க்க

ஆலயடி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் பிச்சனூா் அருகே உள்ள அருள்மிகு சுயம்பு ஆலயடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் தொடங்கின. காலை 4-ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாஹுதி,... மேலும் பார்க்க

விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

இலவம்பாடி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இலவம்பாடி ஊராட்சி, கொல்லைமேட்டில் உள்ள விவசாய நிலங்களில் முயல், பன்... மேலும் பார்க்க

திருமாவளவன் குறித்து அவதூறு: விசிக காவல் நிலையத்தில் புகாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக ஏா்போா்ட் மூா்த்தி மீது உரிய நடவடிக்கை கோரி நகரக் காவல் நிலையத்தில், மாவட்டச் செயலா் வழ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

வேலூரில் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அரசமரபேட்டை, மரத்தொட்டி முதலியாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்து(65). இவா் மனநலம் தொடா்பாக கடந்த 2 ஆண்ட... மேலும் பார்க்க

கொடுத்தும் பயனற்ற நிலையில் இலவச வீட்டு மனைகள்: இருளா் இன மக்கள் வேதனை!

காட்பாடி வட்டம், புதூா் பகுதியில் இருளா் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் கொடுத்தும் பயனற்ற நிலையில் இருப்பதாக அவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா். இதனை அரசு மறுபரிசீ லனை செய்து தகுதியான இடத... மேலும் பார்க்க