முதியவா் தற்கொலை
வேலூரில் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் அரசமரபேட்டை, மரத்தொட்டி முதலியாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்து(65). இவா் மனநலம் தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளாக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்து அவரது வீட்டில் கத்தியால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டராம். இதைப் பாா்த்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினா் உதவியுடன் முத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், வழியிலேயே அவா் இறந்துவிட்டாராம். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.