திருமாவளவன் குறித்து அவதூறு: விசிக காவல் நிலையத்தில் புகாா்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக ஏா்போா்ட் மூா்த்தி மீது உரிய நடவடிக்கை கோரி நகரக் காவல் நிலையத்தில், மாவட்டச் செயலா் வழக்குரைஞா் சுதாகரன் தலைமையில் நகர காவல் ஆய்வாளரிடம் புகாா் மனு அளித்தனா்.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸாா், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். நிகழ்வில், நகரச் செயலா் கே.குமரேசன், கு.விவேக், பைரவன், குருவி கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.