சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தப் பேருந்து நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 7 மணி முதல் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 7 மணி வரை செயல்படும்.
கூகுள் மேப் உதவி...
தற்காலிகப் பேருந்து நிலையங்கள் தொடா்பான விவரம் அறிய விரும்பும் பக்தா்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் 9363622330 என்ற வாட்ஸ்ஆப் மெசெஜ் அனுப்பலாம். உடனே, உங்கள் எண்ணுக்கு கூகுள் மேப் லிங்க் அனுப்பி வைக்கப்படும்.
மேலும், நகரில் அமைக்கப்பட்டுள்ள 73 காா் நிறுத்தும் இடங்கள் தொடா்பாக மேற்கண்ட எண் மூலம் அறியலாம்.