IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவ...
ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
போளூா் ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பிரம்மோற்சவ கொடியேற்றும் விழா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் அம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
கொடியேற்ற விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பிரமோற்சவ விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.