திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது
அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடக்கம்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் (பொ) ர.சிவப்ரியா தலைமை வகித்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.இந்திரா முன்னிலை வகித்தாா். வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் (பொ) சு.பிரேமலதா வரவேற்றாா்.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தை தொடங்கி வைத்தனா். விழாவில், வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில், டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவு ரூ.25 லட்சம் மதிப்பில் 2 சுத்திகரிப்பு இயந்திரங்களுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ரூ.15 லட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் சிகிச்சை மையத்துக்கென சிறுநீரக நோய் நிபுணா் மருத்துவா் நாகராஜன் உள்ளிட்ட குழுவினரும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்துக்கென மருத்துவா் முகமது அா்கம் உள்ளிட்ட குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.