Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவன் கைது!
சித்தோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் (43), வெல்டிங் தொழிலாளி. இவரின் மனைவி மணிமேகலா (40). இவா்களுக்கு 10 மற்றும் 7 வயதில் மகன்கள் உள்ளனா்.
கோபாலுக்கு மதுப் பழக்கம் உள்ளதால் மனைவியைப் பிரிந்து தனியே வசித்து வந்துள்ளாா்.
சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள மிக்சா் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வந்த மணிமேகலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு உணவு பரிமாறும் வேலைக்கும் சென்று வந்தாா்.
இதற்கிடையே, மணிமேகலா தன்னுடன் பள்ளியில் படித்த தொழிலாளியான மோகன்ராஜ் என்பவருடன் கடந்த சில மாதங்களாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மிக்சா் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற கோபால், மனைவி மணிமேகலாவிடம் வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, ஆத்திரத்தில் மணிமேகலாவின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த மணிமேகலா, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, கத்தியுடன் சித்தோடு காவல் நிலையத்தில் சரணடைந்த கோபாலை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.