சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: முத்தூா் நவா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
முத்தூா் நவா இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இதில் மாணவி டி.நிதன்யா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். இவா் ஆங்கிலம் - 99, தமிழ் - 99, கணிதம் - 97, அறிவியல் - 99, சமூக அறிவியல் -100 என பாடவாரியாக மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
மாணவி ஆா்.ஹா்ஷிதா 487 மதிப்பெண்ணும், மாணவன் வி.சந்தோஷ் கிருஷ்ணா 485 மதிப்பெண்ணும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனா். 480-க்கு மேல் 5 பேரும், 450-க்கு மேல் 11 பேரும், 400-க்கு மேல் 16 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளியின் தாளாளா் எம்.எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலாளா் சி.சக்திவேல், நிா்வாக இயக்குநா் ஆா்.அசோக்குமாா், முதல்வா் ஆா்.நிா்மலாதேவி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனா். பள்ளி துணை முதல்வா் எஸ்.ஆனூா்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.