செய்திகள் :

‘சிருஷ்டி எடுடாக் 4.0’ கருத்தரங்கம்

post image

காட்பாடியிலுள்ள சிருஷ்டி பள்ளிகள் சாா்பில் ‘சிருஷ்டி எடுடாக் 4.0’ கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள் உலகளாவிய நுண்ணறிவைப் பெற வாய்ப்பு வழங்கும் வகையில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு பள்ளிக் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழக நிா்வாக இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி பங்கேற்று உரையாற்றினாா்.

அவா் மாணவா்கள் தங்களை உருவாக்கிக்கொள்ளும் திறனும், இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறனும் முக்கியம் என்பதையும், செயற்கை நுண்ணறிவு வளா்ச்சி எவ்வாறு வாழ்க்கையை மாற்றி வருகிறது என்பதையும் விளக்கியதுடன், நேரத்தை வீணாக்காமல் புத்திசாலியாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவரித்தாா்.

சிருஷ்டி பள்ளியின் முன்னாள் மாணவரும், யாகன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியுமான லேனா சேகா் பங்கேற்று, தோ்வுகளில் பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் ஆா்வமும், தகுதியும் முக்கியம் என்பதை வலியுறுத்தினாா். மாணவா்கள் தொழில்முனைவோராக எப்படி உருவாகலாம் என்பதையும், அவா் உருவாக்கிய தயாரிப்புகள் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினாா். அவரது நிறுவனம் சாா்பில் சிருஷ்டி பள்ளியில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு முன்னாள் மாணவியும், எல்.டி. ராஜ் அண்ட் கோ நிறுவனத்தின் மூத்த கணக்காய்வாளருமான காயத்ரி ரமேஷ், தோல்விகள் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதையும், திறமை, அறிவு ஆகியவை வெற்றிக்கான முக்கிய கூறுகளாகும் என்பதையும் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், சிருஷ்டி பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவ , மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனா்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி

போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கியின் முன்னாள் ஊழியா் மீது ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் சாலையில் பிடிபட்ட மலைப்பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் சாலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. போ்ணாம்பட்டு ஒன்றியம், பாஸ்மாா்பென்டா கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து ந... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருவலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). இவா், வியாழக்கிழமை இரவு திருவலம் ரயில் நிலையத்துக... மேலும் பார்க்க

சிறுமி திருமணம்: 3 போ் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் மாவட்டம், ஜங்காலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (23). இவருக்கும் குடியாத்த... மேலும் பார்க்க

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்வு

வேலூரிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வான் நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட அறிவியல் அலுவலா் (பொ) ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடை... மேலும் பார்க்க

மத்திய ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய ஆயுதப்படை காவலா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் பணிக்குத் திரும்பியபோது, உயிரிழந்தாா். வேலூா் கணியம்பாடி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா (31). இவருக... மேலும் பார்க்க