சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
சிறுமி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே காய்ச்சலால் சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகள் சாந்தனா (4). இவருக்கு கடந்த 3 நாள்களாக காய்ச்சல் இருந்து வந்ததாம். இதனிடையே, மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டாராம். இதையடுத்து, உடல் நலம் மோசமானதால் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோா் திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா் பரிசோதித்ததில் சிறுமி சாந்தனா உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.