சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா், கடந்த பிப்.27-ஆம் தேதி நள்ளிரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தாராம்.
அப்போது, அவரது 10 வயது மகளான சிறுமிக்கு வில்லியனூரைச் சோ்ந்த வினோத் குமாா் (22) பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வினோத் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.