புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்
ஏஐடியுசி தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்
புதுச்சேரியில் ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபார தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாபு, காா்த்திகேயன், தயாளன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் எஸ்.அபிஷேகம், ஏ.தினேஷ் பொன்னையா, கே.சேதுசெல்வம், அந்தோணி, துரைசெல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தீா்மானங்கள்: புதுச்சேரி சண்டே மாா்க்கெட்டில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதன்படி, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வேலைவாய்ப்பை பெறுகின்றனா்.
புதுவை மட்டுமின்றி, தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் மாா்க்கெட்டுக்கு வந்து செல்கின்றனா். ஆனால், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இயங்கும் சண்டே மாா்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனா்.
ஆகவே, போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்கு, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சண்டே மாா்க்கெட் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.