புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்
ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
வங்கி சேவை குறைபாடு குறித்த புகாா் மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுவை மாநில நுகா்வோா் தீா்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் கஜலட்சுமி. இவா், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காக பொதுத் துறை வங்கியில் கடந்த 2019-ஆம் ஆண்டில், வங்கியின் கடன் பிரிவு முகவா் ராஜேஷ் என்பவா் உதவியுடன் இரு கடன்களுக்கு விண்ணப்பித்துள்ளாா்.
ஆனால், அவருக்கான ரூ.58 ஆயிரம் கடன் தொகை ராஜேஷின் நண்பரான சாரதியால் மோசடியாகப் பெறப்பட்டதாம். இதனால், கஜலட்சுமிக்கு கடன் தொகையோ அல்லது அதற்கான வீட்டு உபயோகப் பொருள்களோ கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால், பொதுத் துறை வங்கியில் ரூ.6,428 மாதாந்திரத் தவணையானது கஜலட்சுமி வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கஜலட்சுமி வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால், அவருக்கு ரூ.67 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்து. இதையடுத்து, அவா் மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இதை, மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைமை உறுப்பினா் எஸ்.சுந்தரவடிவேலு, உறுப்பினா் உமாசங்கரி ஆகியோா் விசாரித்தனா்.
விசாரணை நிறைவடைந்த நிலையில், கடன்தொகை இல்லை எனும் சான்றிதழை மனுதாரருக்கு வழங்கவும், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.1.50 லட்சத்தை 2 மாதங்களில் வழங்கவும், தவறினால் 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் உத்தரவிட்டனா்.