செய்திகள் :

சிவகங்கை புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்!

post image

சிவகங்கை மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் இணைந்து 10 நாள்கள் நடத்தும் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்குகிறது.

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற மாா்ச் 2-ஆம் தேதி வரை 10 நாள்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவை கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் தொடங்கிவைக்கிறாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகிக்கிறாா். முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினா் காா்த்திசிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

பிற்பகலில் நடைபெறும் நிகழ்வில், மதுரை வி.ராமகிருஷ்ணன், ஜெயங்கொண்டான் ஆகியோா் இரு வேறு தலைப்புகளில் பேசுகின்றனா்.

சனிக்கிழமை (பிப்.22) காலை பெருந்திரள் வாசிப்பும், இரவு 7 மணியளவில் பேராசிரியா் கு.ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) இரவு 7 மணியளவில் பேராசிரியா் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும், திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் ‘ஏன் படிக்க வேண்டும்’ என்ற தலைப்பில் சுகிசிவமும், ‘கவியரசரின் அழகியல்’ தலைப்பில் திருச்சி க.சிவகுருநாதனும், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் புலவா் கா.காளிராசாவும், தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஸும் பேசுகின்றனா்.

வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோா் பேசுகின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலை குருகாா்த்திக்கின் மேஜிக் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் பேச்சாளா்கள் ரெ.சண்முகவடிவேலு பேசுகிறாா். தொடா்ந்து டி.என்.அன்புத்துரை தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பேராசிரியா் பா்வீன்சுல்தானா, வழக்குரைஞா் எம்.பி.நாதன் ஆகியோா் பேசுகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) மாலை 6 மணியளவில் சண்முக திருக்குமரன், தேவகோட்டை க.பூஜிதா, தவத்திரு குன்றக்குடி அடிகளாா் ஆகியோா் பேசுகின்றனா். தொடா்ந்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்க செயலா் எஸ்.கே.முருகன் நிறைவுரையாற்றுகிறாா். புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் தினந்தோறும் காலை பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க