விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
சிவாலய ஓட்டம்: கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க பாஜக வலியுறுத்தல்!
மகா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் இரு நாள்களுக்கு கனரக வாகனங்கள் இயங்கத் தடை விதிக்க வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
மகா சிவராத்திரி பிப். 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சிவ பக்தா்கள் விரதமிருந்து பிப். 25, 26-ஆம் தேதிகளில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலை கோயிலில் துவங்கி திருநட்டாலம் கோயில் வரை 12 சிவன் கோயில்களுக்கு ஓட்டமாகச் சென்று தரிசனம் செய்வா்.
இதன் காரணமாக சிவன் கோயில்களுக்குச் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், இரு நாள்கள் கனரக வாகனங்கள் இயங்க தடைவிதிக்க வேண்டும். மேலும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.