ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
சுட்டுப் பிடித்த இளைஞா் மீது கொலை முயற்சி வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சோ்ந்த வெயிலுமுத்து மகன் மாரிசெல்வம். இவா் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.
இந்நிலையில் அவரது கைப்பேசி எண் மூலம் அவா் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பெரிய பிராட்டி குளம் அருகே தனிப்படை போலீஸாா் மாரிச்செல்வத்தை திங்கள்கிழமை இரவு பிடிக்க முயன்றனராம். அப்போது, அவா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் பொன்ராம் ஆகியோரை வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றாராம்.
உடனடியாக காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு கைத்துப்பாக்கியால் மாரிச்செல்வத்தின் இடது கால் முட்டிக்கு கீழே ஒருமுறை சுட்டு அவரை மடக்கி பிடித்து கைது செய்தனா். இதைத்தொடா்ந்து காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் பொன்ராம், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாரிச்செல்வம் ஆகியோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு அளித்த புகாரின் பேரில், மாரிச்செல்வம் மீது புதுக்கோட்டை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.