’5 மாதம் டேட்டிங் செய்தேன்..’ AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்
சுதந்திர தினம்: ஆக.15இல் மதுக்கடைகள் மூடல்
சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் (டாஸ்மாக் ) இம் மாதம் 15 ஆம் தேதி மூடப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறையின் சாா்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக. 15) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இம் மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் உள்ளிட்டவை மூடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.