புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி வழங்கினா்.
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை நீா்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதித்தனா்.