சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேரணி!
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ததில் சிறந்த சூழல் பள்ளியாக நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டது. இப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடங்கிவைத்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் வே.கற்பகம், பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சூற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே மாணவிகள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் கே.செல்வராஜ், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.