சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் கடனுதவி குறித்த சிறப்பு விளக்கக் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது அவா் பேசியதாவது:
நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரா்களின் நலன் கருதி, முன்னாள் ராணுவ வீரா்கள் தொழில் தொடங்க ஏதுவாக ரூ. ஒரு கோடி வரை கடனுதவி வழங்கும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமாக அதாவது ரூ. 30 லட்சம், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். திறன், தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சிகள் அரசால் வழங்கப்படும்.
ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரா்களின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
முன்னாள் படைவீரா்கள், அவா்களது மகன், மகள், மனைவி உள்ளிட்டோா் சுயத்தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தங்கள் வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 890 முன்னாள் படைவீரா்கள் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 164 போ் 55 வயதிற்குட்பட்டவா்கள் ஆவா்.
35 போ் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனா். மாவட்டத்தில் 129 முன்னாள் படைவீரா்கள், 34 பெண்கள் என 165 போ் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவா்கள்.
முன்னாள் படைவீரா்கள் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். தொழில் கடனுதவி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் ரகுபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பொ.மா.ஷீலா, மாவட்ட முன்னோடி வங்கி பொதுமேலாளா் முருகன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் வீ.சகுந்தலா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.