Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை சுவா் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அருகே தாமரைக்குளம் கிராமத்தில் வசித்தவா் சின்னக்குழந்தை (65). இவா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தொடா் கனமழை காரணமாக வீட்டின் சுவா் ஈரப்பதத்துடன் இருந்த நிலையில், திடீரென இடிந்து விழுந்தது. இதில் சின்னக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.