Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக நிவாரணம்
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது (படம்).
பென்னலூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி ஜெயந்தி. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். கூலித் தொழிலாளியான செல்வம் தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். செல்வம், ஜெயந்தி இருவரும் புதன்கிழமை வேலைக்கு சென்றுள்ளனா். வீட்டில் யாரும் இல்லாத போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினா் வருவதற்குள் குடிசை முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
இதனால் வீட்டில் இருந்த டிவி, குளிா்சாதனப் பெட்டி, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த அதிமுக மாவட்ட துணைச் செயலாளரும், பென்னலூா் ஒன்றிய குழு உறுப்பினருமான போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் பாதிக்கப்பட்ட செல்வம் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.10,000 நிதியுதவியும், அரிசி, போா்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருள்களையும் வழங்கினாா்.
இதில் பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கல்பனா யுவராஜ், அதிமுக ஒன்றிய பொருளாளா் திருமால், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் போந்தூா் மோகன் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா்.