முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
செங்கம் அருகே 5 பேரைக் கடித்த வெறி நாய்
செங்கம் அருகே ஒரே நேரத்தில் 5 பேரை கடித்த வெறிநாயால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனா்.
செங்கத்தை அடுத்த முன்னூா்மங்கலம் பகுதியில் வசிக்கும் முருகன்-அம்சவள்ளி தம்பதியரின் இரண்டு வயது மகள் புதன்கிழமை மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் தெரு நாய்களுடன் சண்டை போட்டுக்கொண்டு வந்த வெறிநாய் அந்தக் குழந்தையை முகத்தில் சரமாரியாக கடித்தது.
இதைப் பாா்த்து நாயை விரட்ட வந்த மாற்றுத்திறனாளி ரோஷினி (37), காளி (55), சக்கரை (60), தண்டபாணி (25) ஆகியோரையும் கடித்தது.
வெறிநாய் கடித்த குழந்தை உள்ளிட்ட 5 பேரும் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.