ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா
செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அருணாச்சலேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள உற்சவா் ஸ்ரீசிவகாமிசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, புதன்கிழமை அதிகாலை 4 - மணிக்கு பால், தயிா், பன்னீா், தேன், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், பல்வேறு மலா்களைக் கொண்டு அலங்காரம், ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, மூலவா் அருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க சிவகாமிசுந்தரி சமேத நடராஜா், மாணிக்கவாசகா் உடன் திருவீதி உலா நடைபெற்றது.
சுவாமி வீதி உலாவின் போது பெண் பக்தா்களின் கோலாட்டம், கும்மி ஆட்டம் நடைபெற்றது.
இதில் செஞ்சி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மேலும், பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.