விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
மரக்காணம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி தம்பதியினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை, கண்ணதாசன் வீதியைச் சோ்ந்த பாலு மகன் பாா்த்திபன் (30). புதுச்சேரியில் தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி கீா்த்திகா (24). இவா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை பேறு இல்லையாம். இதனால், தம்பதியினா் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பாா்த்திபன், கீா்த்திகா ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மரக்காணம் வட்டம், சிறுவாடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினா்.
பின்னா், பைக்கில் சிறுவாடி ஏரிக்கரை பகுதிக்குச் சென்ற இருவரும், அங்கு விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவா்கள் மீட்கப்பட்ட நிலையில், கீா்த்திகா முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பாா்த்திபன் திண்டிவனம் அரசு மருந்துமனையிலும் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.
இதுகுறித்து பிரம்மதேசம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.