இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு
சென்னிமலையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
சென்னிமலை ஒன்றியத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து குமராவலசு, முருங்கத்தொழுவு ஊராட்சி பொதுமக்கள், வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னிமலை ஒன்றியத்தில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளது. குமராவலசு கிராம ஊராட்சிக்குள்பட்ட மயிலாடி பகுதியைச் சோ்ந்த வசந்தாமணி என்பவரின் ஆட்டை கடித்து தெருநாய்கள் அண்மையில் கொன்றுவிட்டன.
இந்தப் பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிவதால் கால்நடை வளா்ப்போா் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
மயிலாடி, நடுப்பாளையம், ஞானிபாளையம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலைகளில் செல்லும் மக்களையும் கடித்து வருகின்றன. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் அந்த சாலைகளில் செல்லவே அச்சப்படுகின்றனா்.
எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.