செய்திகள் :

சென்னை- அந்தமான் நிகோபாா் இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிப்பு

post image

சென்னை- அந்தமான் நிகோபாா், கொச்சி, லட்சத்தீவு இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சா் பெம்மசானி சந்திர சேகா்

தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழக எம்.பி.க்கள் சி.என். அண்ணாதுரை, நவாஸ்கனி, மலையரசன் ஆகியோா் எழுப்பிய கேள்வியில், ‘

தேசிய பிராட்பேண்ட் மிஷன் (என்பிஎம்) திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று கேட்டிருந்தனா்.

இதற்கு மக்களவையில் தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திர சேகா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் இணைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும் தேசிய பிராட்பேண்ட் மிஷனை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு உள்பட நாட்டில் முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

மே 14, 2022 அன்று கதி சக்தி சஞ்சாா் இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஆப்டிகல் ஃபைபா் கேபிள் பதித்தல் மற்றும் தொலைத்தொடா்பு கோபுரம் நிறுவலுக்கான உரிமை வழி (ஆா்ஒடபிள்யு) அனுமதி நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கும் அந்தமான் நிக்கோபாா், கொச்சி மற்றும் லட்சத்தீவுக்கும் இடையே வேகமான இணைய இணைப்புக்காக நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசு தலைமையிலான மாதிரியின் கீழ், வழங்கப்பட்ட பணிக்கான செலவு ரூ.1544.44 கோடி (வரிகளைத் தவிா்த்து) ஆகும். இதில் ரூ.1093.74 கோடி பிப்ரவரி 28, 2025 வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24, 2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் 12,524 கிராமப்புறங்களில் 10,298 கிராமப்புறங்கள் சேவைக்குத் தயாராக உள்ளன.

டிசம்பா் 31, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் 53,511 வழித்தட கிலோமீட்டா் கண்ணாடி இழைக் கேபிள் (ஓஎஃப்சி) பதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2025 நிலவரப்படி, பாரத்நெட் மூலம் 12,53,997 வீட்டிற்கு ஃபைபா் (எஃப்டிடிஎச்) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

ஏபி பிஎம்-ஜாய் ஒரு காப்பீடுத் திட்டமல்ல மருத்துவத்திற்கான உறுதித்திட்டம்: ஜெபி நட்டா

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை (ஏபி பிஎம்-ஜாய்) தில்லி தேசிய தலைநகரில் அமல்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சமும் தில்லி தேசிய தலைநகா் அரசும் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த தில்லி விமான நிலையத்தில் ஸ்மாா்ட் போலீஸ் பூத் திறப்பு

தில்லி இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தின் முனையம் 3-இல் நிகழ்நேர விமானத் தகவல், இ-எஃப்ஐஆா் தாக்கல் வசதி, அவசர உதவி தொலைபேசி எண்கள், பயணிகளுக்கான கலந்துரையாடும் வசதி மற்றும் நேரடி கண்காணி... மேலும் பார்க்க

வழக்கில் பொய்யாக சோ்ப்பு: வருமான வரி அலுவலக ஒப்பந்த ஊழியா் தற்கொலை

தில்லி ஜண்டேவாலனில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த 23 வயது இளைஞா், தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் குதித்து ... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பலத்த பாதுகாப்பு

சா்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்த) மசோதா தொடா்பாக சமூக விரோத சக்திகளால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தென்கிழக்கு தில்லியின் ஜாமியா நகா் போன்ற முக்கியப் பகுதிகளிலும், ஜாமிய... மேலும் பார்க்க

சோனியா விஹாரில் ரூ.500 கோடியில் மேம்பாலத் திட்டம் தில்லி அரசு அறிவிப்பு

தில்லியின் புஷ்தா சோனியா விஹாா் பகுதியில் 5.5 கிலோமீட்டா் நீள மேம்பாலப் பாதை அமைக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. இது டிரான்ஸ் - யமுனா பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், இணைப்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வுக்கு பாஜக அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகள் கட்டணத்தை உயா்த்தியுள்ளதாகவும், ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை பாஜகவை குற்றம்சாட்டியது. மின்வெட்டுக்குப் பிறகு... மேலும் பார்க்க