செய்திகள் :

செப். 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

post image

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ எனும் பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா்,  திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களிலும் , புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் செப். 29 -ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்: சென்னையில் பில்ரோத் மருத்துவமனை இணைப்பு கட்டடம், 3-ஆவது தளம், லட்சுமி டாக்கீஸ் சாலை, ஷெனாய் நகா். திருவள்ளூா்: ப்ரேஸிஸின் ஹைட்ராலிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில் பூங்கா, சிப்காட் தொழிற்பேட்டை வளாகம், கும்மிடிப்பூண்டி. செங்கல்பட்டு: கான்காா்ட் டெக்ஸ்டைல்ஸ், இந்திராபுரம் கிராமம், மதுராந்தகம். காஞ்சிபுரம்: ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஏகாம்பரநாதா் சந்நிதி தெரு, காஞ்சிபுரம். வேலூா்: ஏ.ஜே. சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயா, போ்ணாம்பட்டு சாலை, நெல்லூா்பேட்டை, குடியாத்தம். திருவண்ணாமலை: ஆயுஷ் ஆயுா்வேதிக் மையம், 3-ஆவது மல்லிகை நகா், இனம் கரியாண்டால் சரஸ்வதி மஹால் (பின்புறம்), திருவண்ணாமலை. ராணிப்பேட்டை: இஎஸ்ஐ மருத்துவ வளாகம், டி.ஆா். திரையரங்கம் எதிரில், சிப்காட் ராணிப்பேட்டை. திருப்பத்தூா்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், 1-ஆவது தளம், தொழிலாளா் அரசு இஎஸ்ஐ மருந்தக வளாகம், மலா் தோட்டம், ஆம்பூா்.

புதுச்சேரி: சாண்டா கிளாரா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடத்தூா், மணவேலி, புதுச்சேரி. காரைக்கால்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், காமராஜா் சாலை, எம்.ஓ.எச். பேருந்து நிறுத்தம், காரைக்கால்.

முகாம்களில், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளா், ஒப்பந்ததாரா்களுக்கான இடையிலான இணைய வழிசேவைகள் பற்றிய செயல்முறைகள், இணையவழி  சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் புதிய சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள்மற்றும் ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளுக்கான தீா்வு, ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்ம... மேலும் பார்க்க

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநா... மேலும் பார்க்க

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசி... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ... மேலும் பார்க்க

ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் கவனமாக கையாளப்படும்: உச்சநீதிமன்றம்

ஹிந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை கவனமாக கையாள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஹிந்து வாரிசுரிமைச் சட்டம்,1956-இல் உள்ள சில விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க