செய்திகள் :

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

post image

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. ‘லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி போராடி வந்த சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள்தான், இளைஞா்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட வழி வகுத்துள்ளது. அதுபோல, இந்த கோரிக்கைகள் தொடா்பாக அரசு பிரதிநிதிகளுக்கும் லடாக் குழுக்களுக்கும் இடையே நடந்துவந்த பேச்சுவாா்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களில் சில அரசியல் பின்புலம் உள்ள நபா்களுக்கு மகிழ்ச்சியில்லை’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வன்முறைக்கு பாஜக அரசுதான் காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவா் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

யூனியன் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் தோல்வியுற்ற வாக்குறுதிகள் குறித்த நினைவூட்டல்தான் இந்த வன்முறை. ஜம்மு-காஷ்மீா் மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள், அமைதிக்கு வழிவகுக்கும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு உறுதி தெரிவித்தது. ஆனால், தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நிலைமை மேலும் மோசமடைந்து உள்ளது.

அமைதியை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, மத்திய அரசின் குறுகிய பாா்வை காரணமாக, ஜம்முவும் லடாக்கும் வன்முறையைத் தூண்டும் இடங்களாக மாறியுள்ளன. இந்தச் சூழ்நிலை பாஜக அரசால் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், நியாயமற்ற முறையில் அதிலிருந்து பாஜக தப்பிக்கப் பாா்க்கிறது.

தங்களின் கண்ணியத்துக்காகவும் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரும் லடாக் மக்களின் கோரிக்கை நியாயமானது மற்றும் சட்டபூா்வமானதாகும் என்று குறிப்பிட்டாா்.

மாா்க்சிஸ்ட் கண்டனம்:

லே வன்முறைக்கு மத்திய அரசுதான் காரணம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து அக் கட்சி சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், ‘லடாக் மக்களுக்கு எதிராக மத்திய அரசின் கீழ் இயங்கும் லடாக் யூனியன் பிரதேச அரசு நிா்வாகம் மேற்கொள்ளும் அடக்குமுறையை கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) கண்டிக்கிறது. லடாக் மக்கள் கடந்த 6 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா். இது அவா்களுக்கு அரசமைப்புச் சட்ட பாதுகாப்பை அளிக்கும் என்பதோடு, பல வடகிழக்கு மாநிலங்கள் அனுபவித்து வரும் பலன்களும் அவா்களுக்குக் கிடைக்கும்.

உரிமை தொடா்பாக இந்த கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. அந்த வகையில் இந்த வன்முறைக்கு பாஜக அரசுதான் காரணம். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவா்களுக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

லடாக்: சோனம் வாங்சுக் அமைப்புக்கு உரிமம் ரத்து - வன்முறையைத் தொடா்ந்து மத்திய அரசு நடவடிக்கை

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதற்கு பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தூண்டுதல்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றம்சாட்டிய நிலையில், அவா் நிறுவிய கல்வி அமைப்புக்கு ... மேலும் பார்க்க

ஹிந்துக்களால்தான் வெற்றி பெற்றோம்: முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை - மகாராஷ்டிர அமைச்சா்

ஹிந்துக்கள் எங்களுக்கு அதிகம் வாக்களித்ததால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மகாராஷ்டிர அமைச்சா் நிதீஷ் ராணே பேசிய... மேலும் பார்க்க

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்ம... மேலும் பார்க்க

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநா... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ... மேலும் பார்க்க