`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
செமப்புதூரில் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே செமப்புதூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரக் குழு உறுப்பினா் சிங்கராஜ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் உமையராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா, வட்டாரச் செயலா் சோலையப்பன் ஆகியோா் பேசினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.