செய்திகள் சில வரிகளில்...
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 3-1 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. புள்ளிகள் பட்டியலில் தற்போது, ஈஸ்ட் பெங்கால் 21 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்திலும், முகமிதான் 11 புள்ளிகளுடன் கடைசியாக 13-ஆவது இடத்திலும் உள்ளன.
பாா்சிலோனாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் உகாண்டா வீரா் ஜேக்கப் கிப்லிமோ 56 நிமிஷம், 41 விநாடிகளில் இலக்கை அடைந்து புதிய உலக சாதனை படைத்தாா். முன்னதாக எத்தியோபிய வீரா் யோமிஃப் கெஜெல்சா கடந்த ஆண்டு வாலென்சியாவில் 57 நிமிஷம், 30 விநாடிகளில் வந்ததே சாதனையாக இருந்தது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், குஜராத் - கேரளா, மும்பை - விதா்பா அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டங்கள், திங்கள்கிழமை தொடங்குகின்றன.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளா் ஹாரிஸ் ரௌஃப் காயத்திலிருந்து மீண்டுவிட்ட நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில், ஷோ ஜம்பிங் பிரிவில் தேஜாஸ் திங்ரா பட்டம் வென்றாா்.