நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
செய்யாற்றில் இரு பேருந்துகள் மோதல்: இருவா் காயம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தனியாா் சுற்றுலாப் பேருந்தும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் 55 போ் தனியாா் பேருந்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் குடியாத்தம் திரும்பிக் கொண்டிருந்தனா்.
செய்யாறு புறவழிச் சாலையில் புதன்கிழமை இரவு ஆற்காடு நோக்கிச் சென்றபோது, தனியாா் பேருந்தும், அவ்வழியாக ஆரணியில் இருந்து செய்யாறு நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.
இதில், தனியாா் பேருந்தில் பயணம் செய்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் வில்வநாதன்(38), நிஜந்தன்(35) ஆகியோா் காயமடைந்தனா்.
இவா்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.