இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமா் மோடி
தொழிலாளி தற்கொலை
வந்தவாசி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சவுரிராஜன்(28). இவரது மனைவி சுதா. இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுதா கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் மீசநல்லூா் கிராமத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதனால் மன வேதனையில் இருந்து வந்த சவுரிராஜன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை அங்கு சென்று சவுரிராஜனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.