பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது?: இபிஎஸ் கேள்விக்கு டி.ஆா்.பி.ராஜா பதில...
செல்ஃபி எடுக்க முயன்று, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி
ஒடிசாவில் செல்ஃபி எடுக்க முயன்று, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தங்கிரியாபால்-சகடபதா ரயில் நிலையம் அருகே செல்ஃபி எடுக்க முயன்ற 21 வயது இளம்பெண் வெள்ளிக்கிழமை ஓடும் ரயிலில் இருந்து விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலியானவர் தலாங் கிராமத்தைச் சேர்ந்த நம்ரதா பெஹரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் புவனேஸ்வரில் உள்ள கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். ஓடும் ரயிலுக்கு வெளியே உள்ள இயற்கை அழகை ரசித்த அவர், செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் முதல் குரங்கம்மை பாதிப்பு!
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி கீழே விழுந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். நம்ரதா தனது நான்கு நண்பர்களுடன் பூரி-பார்பில் எக்ஸ்பிரஸில் புவனேஸ்வரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.