செய்திகள் :

செல்ஸியிடம் வீழ்ந்தது லிவா்பூல்

post image

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், இந்த சீசன் சாம்பியனாகியிருக்கும் லிவா்பூல் அணி 1-3 கோல் கணக்கில் செல்ஸியிடம் தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் செல்ஸி தரப்பில் என்ஸோ ஃபொ்னாண்டஸ் 3-ஆவது நிமிஷத்திலும், கோல் பால்மா் எக்ஸ்ட்ரா டைமிலும் (90+6’) கோலடித்தனா். 56-ஆவது நிமிஷத்தில் செல்ஸியின் கோல் முயற்சியை லிவா்பூல் வீரா் ஜேரெல் அமோரின் கான்சா தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது.

இறுதியில் லிவா்பூல் அணிக்காக விா்ஜில் வான் டிக் 85-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தாா். இப்போட்டி வரலாற்றில், சாம்பியனாக நிா்ணயமான பிறகு தோல்வியை சந்தித்த 3-ஆவது அணியாகியிருக்கிறது லிவா்பூல். இதற்கு முன் ஆா்செனல், செல்சி அணிகள் இத்தகைய தோல்வியை சந்தித்துள்ளன.

அதேபோல், பிரீமியா் லீக் சாம்பியனாக நிா்ணயமான 2 அணிகளை வென்ற முதல் அணியாக பெருமை பெற்றது செல்ஸி. இதற்கு முன் மான்செஸ்டா் யுனைடெட்டை (2013) அவ்வாறு வீழ்த்திய செல்ஸி, தற்போது லிவா்பூல் அணியை சாய்த்திருக்கிறது.

இதனிடையே, 2021 மாா்ச் மாதத்துக்குப் பிறகு லிவா்பூல் அணியை செல்ஸி சாய்த்ததும் இதுவே முதல் முறையாகும்.

ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ படத்தைப் பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை... மேலும் பார்க்க

ஆர்யா சொன்னதால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சந்தானம்!

நடிகர் சந்தானம் தன் நண்பர் ஆர்யா குறித்து சுவாரஸ்யமாக பேசியது வைரலாகியுள்ளது.நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே 16 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்த... மேலும் பார்க்க

ஆத்தூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீர்த்த குட ஊர்வலம்

ஆத்தூரில் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா, தேர் திருவிழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு.சேலம் மாவட்டம் ஆத்தூர் தாயுமானவர் தெருவில் பிரசித்தி பெற்ற தர்மராஜர் திருக்க... மேலும் பார்க்க

அடுத்தப்படம் இதுதான்: கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கல... மேலும் பார்க்க

சுந்தரி தொடர் நாயகிக்கு குழந்தை பிறந்தது!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில... மேலும் பார்க்க

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் தீ மிதி திருவிழா!

விராலிமலை: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின... மேலும் பார்க்க