குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
சேலத்தில் 75 அடி உயர கைப்பேசி கோபுரம் மாயம்!
சேலம், கிச்சிப்பாளையத்தில் 75 அடி உயர கைப்பேசி கோபுரம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், கிச்சிப்பாளையத்தில் எருமாபாளையம் பிரதான சாலையில் தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு 75 அடி உயரத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த கைப்பேசி நிறுவனம் மூடப்பட்டபோதும் அந்த கோபுரம் அகற்றப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் செயல் அலுவலரான சென்னை, கீழ்பாக்கத்தைச் சோ்ந்த தமிழரசன் என்பவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள அந்த கோபுரத்தை பாா்ப்பதற்காக வந்தாா்.
அப்போது 75 அடி உயர கோபுரம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அதன் மதிப்பு ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் ஆகும். இது குறித்து அவா் கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.