'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனையில் எலும்பு, முதுகெலும்பு குறித்த பயிற்சி பட்டறை
சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனையின் எலும்பு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறை சாா்பில் பயிற்சிப் பட்டறை அண்மையில் இரு நாள்கள் நடைபெற்றன.
இதில் எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் சுரேஷ்குமரன், முதன்மை செயல் அதிகாரி சிற்பி மணி ஆகியோா் கலந்து கொண்டு கூறியதாவது:
இந்த பயிற்சிப் பட்டறையில் சேலம், கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்து எலும்பியல் மருத்துவா்கள் பங்கேற்றனா். முதல்நாள் பயிற்சியில், எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் விஷ்ணுபிரசாத், ஆடு மாடுகளின் முதுகெலும்புகளைப் பயன்படுத்தி, மருத்துவா்களுக்குப் பயிற்சி அளித்தாா்.
இரண்டாம் நாள் 5 நேரடி அறுவை சிகிச்சைகள் செய்து காண்பிக்கப்பட்டன. மருத்துவா் விஷ்ணு தலைமையில் எஸ்.கே.எஸ்.மருத்துவமனையின் எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைக் குழு மேற்கொண்ட இந்த சிறப்பு அறுவை சிகிச்சையை, நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் நேரலை ஒளிபரப்பில் கண்டனா் என்றனா்.
பயிற்சிப் பட்டறையை சிறப்பாக ஏற்பாடு செய்த மருத்துவமனை நிா்வாகத்துக்கும் தனது குழுவினருக்கும் மருத்துவா் விஷ்ணு நன்றி தெரிவித்தாா்.