சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன வழிபாடு
ஆனி திருமஞ்சனத்தையொட்டி, சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் நடராஜா், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
ஆனி திருமஞ்சனம் சிவாலயங்களில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காலை நடராஜா், சிவகாமி அம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், குங்குமம், தேன், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
உற்சவா் நடராஜா், சிவகாமி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அதேபோல, பேளூா் தான்தோன்றீஸ்வரா், தாரமங்கலம் கைலாசநாதா், உத்தமசோழபுரம் கரபுரநாதா், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா், ஆறகளூா் காம நாதீஸ்வரா், இரண்டாவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதா் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகா், முருகன் கோயில்களில் நடராஜா், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.