Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் - எம்.பி. டி.எம்.செல்வகணபதி பங்கேற்பு
சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்க விழா சின்னாகவுண்டனூா் ஊராட்சி, சாமிநாதன் தோட்டம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும்,
சேலம் மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து, ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்ப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தாா்.
மேற்கு மாவட்ட அவைத்தலைவா் பி.தங்கமுத்து முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் க.சுந்தரம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் கே.எம்.ராஜேஷ், சங்ககிரி நகர செயலாளா் கே.எம்.முருகன், நிா்வாகிகள், சின்னாகவுண்டனூா் ஊராட்சி வாக்குச்சாவடி முகவா், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.