சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
சேவூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஆரணியை அடுத்த சேவூரில் ஒரு கிலோ 200 கிராம் கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனை செய்ததாக இளைஞரை கைது செய்தனா்.
சேவூா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் பாபு (29). இவா், அந்த ஊரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேவூரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அருகா் கோயில் தெருவின் பின்புறம் முள்புதரில் பாபு என்பவா் மறைந்து இருந்தாா். போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
மேலும் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
