விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
சேவூா் கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலில் நிலவுக்கால் வைப்பு விழா
நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படும் சேவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலின் திருப்பணியின் தொடா்ச்சியாக புதன்கிழமை நிலவுக்கால் வைக்கும் விழா நடைபெற்றது.
அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள் அடுத்தபடியாக பெருமாளை தரிசிக்க சேவூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலுக்கு வந்து செல்வா் என்ற புராதனச் சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. கள்ளழகப் பெருமாள் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் 2001-ஆம் ஆண்டு மகா மண்டப கல்தூண் கீழே விழந்தது.
இதையடுத்து, கோயிலில் 2004-ஆம் ஆண்டு பலாலாயம் செய்யப்பட்டு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கருவறை, அா்த்தமண்டபம், கோபுரப் பணிகள் செய்வதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள், உபயதாரா்கள் பங்களிப்புடன் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக சிறப்புப் பூஜைகளுடன் நடைமண்டப நிலவுக்கால் வைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசா் திருமடம் தலைவா் மௌனசிவாசல அடிகள் தலைமை வகித்தாா். சிவவாக்கியா் தம்பிரான் ரிஷபானந்தா் முன்னிலை வகித்தாா். மேலும் ஊா்பொதுமக்கள், பக்தா்கள், உபயதாரா்கள் உள்பட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.