செய்திகள் :

சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த தில்லி நீதிமன்றம்

post image

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கு விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 1938-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை, அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை ரூ. 50 லட்சத்துக்கு ‘யங் இந்தியன்’ நிறுவனம் கையகப்படுத்தியது. இந்த ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் சோனியாவும், ராகுல் காந்தியும் பெரும் பங்குதாரா்களாக உள்ளனா்.

இந்நிலையில், இந்த சொத்துப் பரிமாற்றத்தில் மிகப் பெரிய அளவில் பண முறைகேடு நடைபெற்றிருப்பதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி மனு ஒன்றையும் அவா் தாக்கல் செய்தாா்.

இந்த விவகாரத்தில் கடந்த 2021-இல் பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, ‘அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை, சோனியா, ராகுலுக்குச் சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் வெறும் ரூ.50 லட்சத்துக்கு கையகப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையால் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகளின் மதிப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி குற்றச் செயல்கள் மூலம் கோடிக் கணக்கில் பணம் திரட்ட யங் இந்தியன் மற்றும் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியது.

அதைத் தொடா்ந்து, தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை அண்மையில் தாக்கல் செய்தது. அதில், சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் கடந்த மே 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றபத்திரிகையை ஆராய்ந்த நீதிபதி, அதில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பாக பதிலளிக்குமாறு சோனியா, ராகுல் காந்தி, காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களில் ஒருவரான சாம் பிட்ரோடாக்கு வியாழக்கிழமைதான் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்தாா். மேலும், இந்த வழக்கின் புகாா்தாரரான சுப்பிரமணியன் சுவாமி அமலாக்கத்துறை குற்றபத்திரிகை நகலைக் கோரிய நிலையில், வழக்கு விசாரணையில் முதலில் அமலாக்கத்துறை நிலைப்பாட்டை கேட்க நீதிமன்றம் தீா்மானித்தது.

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடி... மேலும் பார்க்க

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க