ஜன.15, 16-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
கடலூா் மாவட்டத்தில் வரும் ஜன.15, 26 ஆகிய இரு நாள்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் ஜன.15-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால், இந்த இரு நாள்களில் கடலூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதை மீறி மது விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.